இப்படி ஏமாத்திட்டீங்களே... பொன்னியின் செல்வன் படக்குழு செய்த செயலால் அப்செட் ஆன ரசிகர்கள்

Published : Sep 06, 2022, 10:08 PM IST

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தாமதம் ஆனதால் கோபமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படக்குழுவை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

PREV
14
இப்படி ஏமாத்திட்டீங்களே... பொன்னியின் செல்வன் படக்குழு செய்த செயலால் அப்செட் ஆன ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இயக்குனர்கள் மிஷ்கின், ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

24

பொன்னியின் செல்வன் படத்தை 3 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ள இப்படத்திற்கு இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு ஏற்றார் போல் படத்தையும் படக்குழு பிரம்மாண்டமாக புரமோட் செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்... ‘பொன்னியின் செல்வன்’ குந்தவையை போல்... பிங்க் நிற புடவையில் பேரழகியாக வந்த திரிஷா... வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

34

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டிரைலரும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் 6 மணிக்கே டிரைலர் வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். பின்னர் 9 மணிக்கு தான் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால் 9 மணிக்கு டிரைலர் ரிலீஸ் செய்யப்படவில்லை.

44

இதனால் கோபமடைந்த ரசிகர்கள் படக்குழுவை கடுமையாக சாடி வருகின்றனர். சொன்ன நேரத்தில் சரியாக டிரைலரை வெளியிட மாட்டீர்களா, எவ்வளவு நேரம் காத்திருப்பது என லைகா நிறுவனத்தை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஒரு சிலரோ, டிரைலர் எங்கடா, சோதிக்காதீங்க என்றெல்லாம் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இது அல்லவா குரு மரியாதை... மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!

click me!

Recommended Stories