பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சீயான் விக்ரம், ரகுமான், பிரபு, நாசர், சரத்குமார் ஆகியோரும், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்வு என்பதால் இந்த விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... நடிகர் அஜித் பிஆர்ஓ-வின் உதவியாளரை அறைந்த பவுன்சர்கள்... பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு