முதலில் கதையை புரிஞ்சிகிட்டு வாங்க..! வாயை விட்டு சிக்கிய பத்திரிகையாளரை கலாய்த்து விட்ட கார்த்தி!

First Published | Sep 6, 2022, 11:02 PM IST

பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்து வரும் நிலையில், வாண்டடாக வாய் விட்டு சிக்கிய பத்திரிக்கையாளரை... ஜாலியாக கலாய்த்து விட்டுள்ளார் கார்த்தி.
 

தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய பட்ஜட்டில், கல்கியின் நாவலான, 'பொன்னியின் செல்வன்' கதையை எம்.ஜி.ஆர் படமாக்கா நினைத்த நிலையில் அது முடியாமல் போனது. இதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் இதனை படமாக எடுக்க நினைத்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவராலும் இந்த கதையை படமாக்க முடியவில்லை. 
 

இதே கதையை, இயக்குனர் மணிரத்னம் 20 ஆண்டுகளுக்கு முன்பே படமாக எடுக்க ஆசைப்பட்டார். ஆனால் அதற்கான சரியான நேரம் மற்றும் இந்த படத்திற்கான பட்ஜெட் காரணமாக அப்போது எடுக்க முடியாமல் போனது. ஆனால் ஒரு வழியாக தற்போது தன்னுடைய கனவு படைப்பான, 'பொன்னியின் செல்வன்' படத்தை இரண்டு பாகங்களாக பிரமாண்டமாக இயக்கி முடித்துள்ளார். 

மேலும் செய்திகள்: இது அல்லவா குரு மரியாதை... மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!
 

Tap to resize

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படம், இம்மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்றைய தினம்... இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் என அனைவருமே கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்கள் கேள்விக்கு பிரபலங்கள் அனைவரும் பதிலளித்தனர்.

அந்த வகையில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கார்த்தியிடம், பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்ப அவரும் மிகவும் பொறுமையாக பதில் கூறினார். அதில் ஒருவர் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திலேயே நீங்க சோழனாக நடித்தீர்களே என கேட்க, "நான் சோழ தூதுவனாக தான் நடித்தேன், நீங்க போய் முதலில் கதையை புரிந்து கொண்டு வாங்க" என ஜாலியாக கிண்டல் செய்துள்ளார் கார்த்தி.

மேலும் செய்திகள்: ச்சீ... ச்சீ... அதுக்குன்னு இவ்வளவு மோசமா? போட்டிருக்கும் பேன்ட்டை அவிழ்த்து உள்ளாடையை காட்டிய சிம்பு பட நாயகி
 

மேலும் பொன்னியின் செல்வன் கதையில், அந்த காலகட்டத்திலேயே வாழ்வது போன்று நடிப்பது மிகவும் சவாலான விஷயம் என்றும் கார்த்தி இந்த படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Latest Videos

click me!