அம்பானி உடன் கூட்டணி... புது பிசினஸில் கால்வைக்கும் நடிகர் விஜய் - என்ன பண்ணப்போகிறார் தெரியுமா?

First Published | Jul 27, 2022, 2:15 PM IST

Vijay : தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய், தற்போது புது பிசினஸ் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல டோலிவுட் இயக்குனரான வம்சி பைடிபல்லி தான் இப்படத்தை இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இப்படத்தில் நடிகர் சரத்குமாரின் வாரிசாக நடிகர் விஜய் நடித்து வருகிறாராம். மேலும் அவர் ஒரு ஆப் டிசைனர் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.  

இதையும் படியுங்கள்... பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்... அவசர அவசரமாக சென்னை திரும்பிய விஜய், அஜித் - ஐதராபாத்தில் என்ன பிரச்சனை?

Tap to resize

நடிகர் விஜய் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்று தான் கல்யாண மண்டபம். சென்னையில் இவருக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் சில உள்ளன. அதன் மூலம் தற்போது புது பிசினஸில் அவர் கால்வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

அதன்படி நடிகர் விஜய் தனக்கு சொந்தமான கல்யாண மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டாக மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து அதில் சூப்பர் மார்க்கெட்டை வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ப்ளீஸ் அநத மாதிரி பிகினி போட்டோ போடுங்க...ஷெரினிடம் கெஞ்சி கேட்ட நெட்டிசன்...ஆசையை நிறைவேற்றிய ஷெரின்..

Latest Videos

click me!