சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்க கமிட்டானது சூர்யா தான். அவர் விலகியதற்கான காரணத்தை சுதா கொங்கரா கூறி உள்ளார்.
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுதா கொங்கரா அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் பராசக்தி. இப்படத்தை முதலில் சூர்யாவை வைத்து புறநானூறு என்கிற பெயரில் இயக்க இருந்தார் சுதா கொங்கரா, அப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்க இருந்தது. அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க இருந்தார். மேலும் துல்கர் சல்மான் மற்றும் விஜய் வர்மா ஆகியோரும் அதில் நடிக்க கமிட்டாகி இருந்தனர். ஆனால் அப்படம் அறிவிப்போடு நின்று போனது. அப்படத்தில் இருந்து சில காரணங்களால் விலகுவதாக சூர்யா அறிவித்தார்.
24
பராசக்தி சிவகார்த்திகேயன்
இதையடுத்து அந்தக் கதை சிவகார்த்திகேயனுக்கு சென்றது. அவரை வைத்து பராசக்தி என்கிற பெயரில் அப்படத்தை எடுத்துள்ளார் சுதா கொங்கரா. பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்தில் அதர்வா மற்றும் ரவி மோகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 10ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவரின் 100வது படமாகும்.
34
சூர்யா விலகியது ஏன்?
இந்த நிலையில், சுதா கொங்கரா, சமீபத்திய பேட்டியில் சூர்யா இப்படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை விளக்கி இருக்கிறார். அதன்படி சூர்யா கொரோனா சமயத்தில் இந்த கதையை கேட்டாராம். கேட்டதும் அவருக்கு மிகவும் பிடித்துப்போக, உடனே அதை டெவலப் செய்ய சொல்லி இருக்கிறார். அந்த சமயத்தில் லாக்டவுன் போடப்பட்டு இருந்ததால், வெளியே சென்று ரிசர்ச் செய்யமுடியவில்லையாம். பின்னர் எல்லாம் முடிந்த பின்னர், ஷூட்டிங்கிற்கு ஒட்டுமொத்தமாக இத்தனை நாட்கள் ஒதுக்குமாறு சுதா கொங்கரா கேட்க, சூர்யாவால் அதை ஒதுக்கமுடியவில்லையாம். இதனால் தான் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார் என சுதா கொங்கரா கூறினார்.
அதேபோல் சிவகார்த்திகேயன் எப்படி இந்த கதைக்குள் வந்தார் என்பது பற்றி பேசிய சுதா கொங்கரா, சூரரைப் போற்று படத்துக்கு முன்பில் இருந்தே சிவாவுக்கு கதை இருக்கிறதா என்று சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா என்னிடம் கேட்டார். அப்போது எதுவும் இல்லை. அதன்பின்னர் புறநானூறு படம் டிராப் ஆன விஷயம் அறிந்ததும் அவர் என்னை அழைத்து அதில் சிவாவை நடிக்க வைக்கலாமா என கேட்கையில், நானும் அதற்கு ஓகே சொன்னேன். அப்படி தான் இந்த கதைக்குள் சிவகார்த்திகேயன் வந்தார் என சுதா கொங்கரா தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.