ஜனனியின் பிசினஸுக்கு முட்டுக்கட்டை... ஓப்பனிங்கே எண்டு கார்டு போட்ட ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது

Published : Dec 26, 2025, 10:45 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தன்னுடைய தமிழ் சோறு பிசினஸ் தொடக்க விழாவின் போது மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தமிழ் சோறு என்கிற பிசினஸை ஜனனி மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் சேர்ந்து தொடங்க ஆயத்தமாகி இருக்கிறார்கள். இந்த திறப்பு விழாவிற்கு எப்படியாவது குடைச்சல் கொடுக்க வேண்டும் என ஆதி குணசேகரனும் அவருடைய தம்பிகளும் கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார்கள். அறிவுக்கரசியும் தன் பங்கிற்கு பிரச்சனை கொடுத்து வருகிறார். இந்த நிலையில், திறப்பு விழா அன்று காலை வீட்டில் பெண்கள் அனைவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க, ஜனனிக்கு ஒரு போன் கால் வருகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
வெடிக்கும் புது பிரச்சனை

ஜனனியின் தமிழ் சோறு பிசினஸுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த இடத்தில் திறப்பு விழாவுக்காக சேர் போட வருகிறார்கள். அந்த இடத்தின் ஓனர் அவர்களை உள்ளே விடாமல் தடுக்கிறார். இதையடுத்து ஜனனியிடம் போன் போட்டு விஷயத்தை சொல்கிறார்கள். அவரிடம் போனை கொடுக்குமாறு ஜனனி சொல்ல, அந்த ஓனர் போனை வாங்கி பேச மறுப்பதோடு, இந்த இடத்தை நான் வாடகைக்கு விடப்போவது இல்லை. நீ சேரை எடுத்துக் கொண்டு கிளம்பு என சொல்கிறார். இதையெல்லாம் போனில் கேட்டுக் கொண்டிருக்கும் ஜனனி, என்ன இது புது பிரச்சனையா இருக்கு என குழம்பிப்போகிறார்.

34
இடத்தை தர மறுக்கும் ஓனர்

பின்னர் சேர் போட வந்தவரிடம் பேசும் ஜனனி, அதெப்படி அவங்க வாடகைக்கு விடாம இருப்பாங்க, ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்டெல்லாம் போட்டாச்சு, அப்புறம் எப்படி விடமாட்டேன்னு சொல்வாங்க என கேட்கிறார். இதையடுத்து அந்த ஸ்பாட்டுக்கு சக்தியுடன் காரில் கிளம்பி செல்கிறார் ஜனனி. இதையெல்லாம் ஒட்டுக்கேட்ட முல்லை, ஏதோ பெரிய விஷயமா பண்ணி அவங்கள அட்டாக் பண்ணுவாங்கனு பார்த்தால், சின்ன விஷயமா பண்ணிருக்காங்க போலயே என அறிவுக்கரசியிடம் சொல்கிறார். மாமா ஏதாச்சும் பண்ணிருப்பாரு, வெயிட் பண்ணி பார்ப்போம் என கூறுகிறார் அறிவு.

44
ஆதி குணசேகரனால் வரும் சிக்கல்

பின்னர் அந்த இடத்துக்கு செல்லும் ஜனனி, அந்த ஓனரிடம் ஏன் இப்ப வந்து பிரச்சனை செய்கிறீர்கள். எல்லாம் தெரிஞ்சு தான எங்களுக்கு வாடகைக்கு கொடுத்தீங்க. எல்லாமே பேசி முடிச்சிட்டோமே, அப்புறம் ஏன் திடீர்னு வந்து பிரச்சனை பண்றீங்க என கேட்கிறார். அதற்கு அவர், ஆமாம்மா எல்லாம் தெரிஞ்சு தான் கொடுத்தேன். ஆனால் உங்களைப் பற்றி கேள்விப்படுற செய்தியெல்லாம் சரியா இல்லை. நீங்க குணசேகரன் வீட்டுக்கு மருமகள்னு சொன்னதும் சில விஷயங்களை யோசிச்சு தான் சம்மதம் சொன்னேன்.

ஆனா நீங்க அந்த வீட்டு ஆம்பளைங்களையே ஜெயிலுக்கு அனுப்ப பல கிரிமினல் வேலைகளை பார்த்துட்டு இருக்கீங்க. ஒருகட்டத்துக்கு மேல பார்த்தால் யார்... யாரோ வந்து நிக்குறாங்க. போறாங்க, இதெல்லாம் நமக்கு சரியா வராதுமா என அந்த ஓனர் சொல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories