எங்களை மீறி அந்த பெண்களால் எதுவும் செய்ய முடியாது என்கிற கர்வத்தில் இருக்கிறார் ஆதி குணசேகரன். அவரின் சதியில் சிக்கி பறிபோகப் போகும் அந்த உயிர் யார் என்பதை பார்க்கலாம்.
ஆதி குணசேகரன் வீட்டில் இல்லாததால் பெண்கள் எல்லாரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் தாங்கள் நினைச்சதை சாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் பெண்கள் எல்லோரும் முன்னேறுவதற்காக தமிழ் சோறு என்கிற புட் ட்ரக் பிசினஸை தொடங்க முடிவு செய்திருக்கிறார்கள். இப்போது அந்த திறப்பு விழாவுக்காக எல்லா ஏற்பாடுகளையும் பெண்கள் செய்து வருகிறார்கள். ஆனால் இதை தடுப்பதற்காகவும் ஜனனியை பழி வாங்குவதற்காகவும் ஆதி குணசேகரனும் கதிரும் பக்காவா ஒரு ஸ்கெட்ச் போட்டு எல்லாத்தையும் பண்ண ஆயத்தமாகிறார்கள்.
25
ஃபுட் ட்ரக் பிசினஸுக்கு ஆப்பு
அவங்க எல்லாருக்குமே பெண்கள் உயிரோடு இருக்கக் கூடாது, ஜனனியை பழிவாங்க வேண்டும் என வெறியோடு காத்திருக்கிறார்கள். அதனால் தமிழ் சோறு என்கிற ஃபுட் ட்ரக்கில் பாம் வைத்து அதை வெடிக்க வைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறார்கள். திறப்பு விழா அன்று அந்த பாம் வெடிக்கப் போகிறது. அதனால் யார் யார் உயிர் பறிபோகப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. ஒன்னு விசாலாட்சியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
35
சாகப்போவது யார்?
அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரியும் என்று சொல்லுவாங்க. கொஞ்ச நாளாவே விசாலாட்சி பெண்களோடு சேர்ந்து பாசமாகவும் அன்பாவும் நடந்துக்கிறாங்க. அதுமட்டுமின்றி விசாலாட்சி தற்போது ஆதி குணசேகரனுக்கு எதிராக வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். அதனால் ஆதி குணசேகரனுக்கு அவருடைய அம்மா இறந்தால் கொஞ்சம் கூட கஷ்டப்பட போவதில்லை. இந்த பாம் ப்ளாஸ்டில் ஜனனியின் உயிரை எடுக்க வேண்டும் என்பது ஆதி குணசேகரனின் டார்கெட்டாக உள்ளது. ஆனால் ஜனனி இதில் இறக்க வாய்ப்பில்லை.
ஜனனி இந்த சீரியலோட ஹீரோயின் என்பதால் அவர் இறப்பது போல் காண்பித்தாள் கண்டிப்பாக எதிர்நீச்சல் சீரியலை யாருமே பார்க்க மாட்டார்கள். கடந்த முறை சக்தி உயிருக்காக போராடிய போது அவரை ஜனனி எப்படி போராடிக் காப்பாற்றினாலோ, அதே போல தான் இந்த முறை ஜனனியை சக்தி காப்பாற்ற வாய்ப்புள்ளது. ஆனால் திறப்பு விழா அன்று கண்டிப்பாக ஒரு பெரிய சம்பவம் நடக்கப்போகிறது. யாராச்சும் ஒரு உயிர் பறிபோக அதிக வாய்ப்பு இருக்கிறது.
55
அறிவுக்கரசி சிக்குவாரா?
இருந்தாலும் அந்த வண்டியில் பாம் வெடிக்கும் போது அறிவுக்கரசியும் முல்லையும் அங்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே அறிவுக்கரசியின் கையை உடைத்தும், முல்லையின் காலை உடைத்தும் இருவருமே திருந்தாமல் திரும்பத் திரும்ப பிரச்சனை செய்து வருகிறார்கள். இப்படியாச்சும் அந்த சீரியலில் அவர்களுக்கு ஏதாவது நடந்து கொஞ்ச நாளுக்கு காணாமல் போனால் நன்றாக இருக்கும். இதெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.