எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கடை திறப்பு விழாவை தடுத்து நிறுத்த ஆதி குணசேகரன் சதிவேலை செய்து வருவதாக ஞானம், ரேணுகாவுக்கு போன் போட்டு சொல்லிவிடுகிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தமிழ் சோறு பிசினஸ் தொடங்க இருக்கும் நிலையில், அதை தடுக்க ஆதி குணசேகரன், கதிர், அறிவுக்கரசி ஆகியோர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்த நிலையில், அதையெல்லாம் கடந்து கடை திறப்பு விழா தேதியை நெருங்கிவிட்ட நிலையில், காலை ஜனனி, கீழே வந்து பார்க்கையில் ஃபுட் டிரக் காணாமல் போகிறது. இதையடுத்து ஜனனி பதறிப்போய் ரோட்டுக்கு சென்று பார்க்கிறார். பின்னர் தான் சக்தி அதை வெளியே எடுத்து சென்றது தெரியவருகிறது. அதனால் நிம்மதி பெருமூச்சு விடுகிறார் ஜனனி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ரேணுகா சொன்ன விஷயம்
ரேணுகா ஆஸ்பத்திரியில் இருந்தபடி நந்தினி மற்றும் ஜனனிக்கு போன் போட்டு பேசுகிறார். அப்போது ஞானம் தனக்கு இரவில் போன் போட்ட விஷயத்தை சொல்கிறார். அவர் தன்னிடம், நீங்க யாரும் கடை திறப்பு விழாவுக்கு போக வேண்டாம் என சொன்னதாகவும், அங்கு ஆபத்து இருப்பதாக கூறிவிட்டு போனை கட்பண்ணிவிட்டார் என சொல்கிறார். அதைக்கேட்டதில் இருந்து தனக்கு மிகவும் டென்ஷனாக இருப்பதாக கூறுகிறார் ரேணுகா. சரி விடுங்க அக்கா, அவர் எதர்ச்சியாக எதாவது சொல்லி இருப்பார் என கூறும் ஜனனி, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று சொன்னார்களா என கேட்க, இல்லை என கூறுகிறார் ரேணுகா.
34
கதிரிடம் போன் போட்டு பேசும் அறிவுக்கரசி
சரி இதையெல்லாம் நினைத்து கவலைப்படாதீர்கள் என்று சொல்லும் ஜனனி, நாங்க அங்க போய் ரீச் ஆன பின்னர் நீங்க அங்க வந்திருங்க என கூறகிறார். பின்னர் வீட்டில் பிசினஸுக்கான சமையல் வேலைகள் ஆரம்பமாகிறது. நந்தினி மற்றும் ஜனனி உடன் சேர்ந்து விசாலாட்சியும் சமைக்க ஆரம்பிக்கிறார். இதையெல்லாம் வெளியே நின்று வயிற்றெரிச்சல் உடன் பார்த்துக் கொண்டிருக்கும் அறிவுக்கரசி, ஆதி குணசேகரனுக்கு போன் போடுகிறார். போனை எடுத்து பேசும் கதிரிடம், கொஞ்ச நேரத்துல கடையை ஓபன் பண்ணிடுவாளுங்க, நீங்க சும்மா உட்கார்ந்துட்டு என்ன பண்றீங்க என கேட்கிறார்.
அவங்க என்னவேனா பண்ணட்டும், அதை தடுக்க என்னவெல்லாம் பண்ணனுமோ அதையெல்லாம் பண்ணிருக்கோம் என சொல்கிறார். செய்தி வரும் வேடிக்கை மட்டும் பாரு என கூறுகிறார் கதிர். மறுபுறம் ஞானம் போன் போட்டு பேசிய விஷயம் தெரிந்த ஆதி குணசேகரன், உங்கையெல்லாம் நம்பி நான் இறங்குனேன் பாரு, அது என்னோட தப்புடா என தலையில் அடித்துக் கொள்கிறார். இதையடுத்து என்ன ஆனது? முதுகில் குத்திய ஞானத்தை ஆதி குணசேகரன் என்ன செய்தார்? கடை திறப்பு விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்தாரா ஜனனி? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.