சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் புது ஆபிஸ் தொடங்கியதால் கடனில் சிக்கி இருக்கிறார். அதேபோல் தினேஷும் போலீஸிடம் சிக்கி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா, பார்வதியின் மகனுக்கு போன் போட்டு அவருக்கும் சிவனுக்கும் இடையே உள்ள நட்பை தவறாக சொல்லிவிட, பார்வதியின் மகன் சித்தார்த் வெளிநாட்டில் இருந்து வந்து தன்னுடைய அம்மாவை திட்டுகிறார். இந்த விஷயம் எல்லாம் விஜயா தான் தனக்கு சொன்னதாக சித்தார்த் சொன்னதை அடுத்து, இனி உனக்கும் எனக்கும் எந்தவித நட்பும் கிடையாது என உதறித்தள்ளுகிறார் பார்வதி. இதையடுத்து வீட்டில் விஜயா தனியாக ரூமில் அழுதுகொண்டிருக்க, என்ன நடந்தது என அனைவரும் கேட்கிறார். அப்போது முத்துவும் மீனாவும் எல்லா உண்மையையும் சொல்கிறார்கள். இதையடுத்து அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.
24
கடனில் சிக்கிய மனோஜ்
இதையடுத்து ரோகிணியுடன் ஆபிஸுக்கு செல்லும் மனோஜ், அங்கு வரவு செலவு கணக்குகளை பார்க்கிறார். அப்போது ஒரு பைலை கொண்டு வந்து நீட்டும் ஜீவா, நம்முடைய ஆபிஸ் தற்போது 30 லட்சம் கடனில் இருப்பதாக சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் ரோகிணி, இதுக்கு தான் புது ஆபிஸ் வேண்டாம்னு சொன்னேன் என கூற, உடனே ஒரு ஐடியா கொடுக்கும் மனோஜ், நமக்கு ஆர்டர் கொடுத்த கிளையண்டுக்கு போன் போட்டு அட்வான்ஸ் தொகை கேளு என சொல்கிறார். ஆனால் ரோகிணி அந்த பெண்ணுக்கு போன் போட்டும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் பதறுகிறார் மனோஜ்.
34
போலீஸ் தந்த அதிர்ச்சி ரிப்போர்ட்
அந்த சமயத்தில் மனோஜின் ஆபிஸுக்குள் போலீஸ் எண்ட்ரி கொடுக்கிறது. தாங்கள் கிரிஷ் கடத்தல் வழக்கை விசாரித்து வருவதாக கூறும் அவர்கள் தற்போது முக்கிய குற்றவாளியான தினேஷை கைது செய்துவிட்டதாக கூறுகிறார். இதைக்கேட்ட ரோகிணி பதறுகிறார். ஆனால் அந்த தினேஷை பிடிக்கும் போது அவர் ஒரு காரில் மோதி, தலையில் பலத்த காயம் அடைந்துவிட்டதாகவும், இதனால் அவனுக்கு சமீபத்தில் நடந்தவை எல்லாம் மறந்துவிட்டதாகவும் கூறுகிறார். இதைக்கேட்ட ரோகிணி அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விடுகிறார். ஆனால் அதன் பின்னர் போலீஸ் ஒரு தரமான ட்விஸ்ட் கொடுக்கிறார்கள்.
எல்லாம் மறந்தாலும் தினேஷ், கல்யாணி என்கிற பெயரை மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறான் என்று கூறுகிறார். இதைக்கேட்டதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். மறுபுறம் மனோஜும், கல்யாணி பெயரை கேட்டதும் ஷாக் ஆகிறார். ஏனெனில் ரோகிணி அடிக்கடி கிரிஷின் அம்மா கல்யாணி ஆவி தன்னுள் புகுந்திருப்பதாக கூறி மனோஜை மிரட்டி வருகிறார். இதையடுத்து என்ன நடந்தது? தினேஷ் போலீஸிடம் ரோகிணி பற்றிய உண்மையை சொல்லுவாரா? மனோஜ் தன்னுடைய கடனை அடைக்க என்ன செய்யப்போகிறார்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.