பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் வம்சி பைடிபள்ளியின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்டவர்களுடன் ராஷ்மிகா மந்தனா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் டைட்டில் லுக் மூன்று அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்றது.
24
VARISU
அதோடு சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு குறித்தான வீடியோக்களும், புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறது.80 சதவீதம் படப்பிடிப்பை முடித்து விட்ட வாரிசு படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். விஜய் - தமன் முதல் கூட்டணி என்பதால் பாடல் குறித்த அதிக எதிர்ப்பு உள்ளது. இந்நிலைகள் வாரிசுப் படம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இடைவிடாமல் வாரிசு படத்தை இக்கிக் கொண்திருப்பதால் இயக்குனர் வம்சிக்கு உடலில் சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதோடு ஒரு வாரமாவது கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என கூறியுள்ளனர் என கூறப்படுகிறது.
இதை எடுத்து விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் பொங்கலுக்கு படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுமோ என்கிற வருத்தத்தில் ரசிகர்கள் உள்ளனர்.