அஜித் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது 'துணிவு' திரைப்படம். வாங்கி கொள்ளையை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக பாங்காங்கில் நடைபெற உள்ளது.