கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 70 வயதை கடந்த பின்னரும்... தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில், அண்ணாத்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இதே ஸ்டுடியோவில் தான் அட்லீ இயக்கி வரும் ஜவான் படப்பிடிப்பும் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், ஷாருக்கானை ரஜினி நேரில் சென்று சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.