பவுலிங் ஜெசிகா சிறு வயதில் இருந்தே, ஒரு நடிகையாக வேண்டும் என கனவோடு வளர்ந்த, ஆந்திராவை சேர்ந்த நடுத்தர குடும்பத்து பெண். படிப்பை முடித்த பின்னர் நடிப்பு தான் தன்னுடைய வாழ்க்கை என தீர்மானித்தார். எனவே கையில் வைத்திருந்த சிறிய அளவிலான சேமிப்பு பணத்துடன் சென்னையில் ஒரு ஹாஸ்டலில் தங்கி பட வாய்ப்புகளை தேட துவங்கினார். அப்போது சில ஷாட் பிலிம்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் வரும் பணத்தை கொண்டு தான் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த தைரியம் தான் இவரை சென்னை வரை அழைத்து வந்து ஒரு படத்தில் ஹீரோயினாகவும் மாற்றியது. ஆனால் இவ்வளவு தைரியமான பெண் எப்படி? தற்கொலை முடிவை எடுத்தார் என்பது தான் தற்போது வரை 'வாய்தா' பட குழுவினரால் நம்ப முடியவில்லை.
இது தான் காரணமா?
மேலும் பவுலின் ஜெசிகா மரணம் குறித்து அவர்கள் கூறுகையில்... வாய்தா படத்திற்கு பின்னர் அவர் ஒரு தமிழ் படம் மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகி இருந்துள்ளார். இரண்டுமே கிராமத்து கதையம்சம் கொண்ட படங்கள் தான். கிட்ட தட்ட கையெழுத்திட போகும் சமயத்தில் சில காரணங்களால், தெலுங்கு பட வாய்ப்பு பறிபோனது. தமிழ் பட வாய்ப்பும் பார்ப்பதற்கு மிகவும் சிறிய பெண் போல் இருப்பதாக கூறி இந்த படத்தில் இருந்தும் விளக்கப்பட்டர். எனவே பவுலில் நம்பிக்கையோடு காத்திருந்த இரண்டு பட வாய்ப்புகளும் கை நழுவி போனதால் மிகுந்த மனஉளைச்சல் இருந்துள்ளார்.
மேலும் செய்திகள்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறதா AK61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்? வெளியான பரபரப்பு தகவல்!
அப்போது இவருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக இருந்தது, இவருடைய காதலும்... காதலன் தன்னை வைத்து படம் எடுப்பதாக கூறிய வார்த்தையும் தான். ஆனால் அதுவும் கடைசியில் நடக்காமல் போனது. எனவே ஒரு நிலையில் பட வாய்ப்பும் இல்லை... காதலும் கை கூடவில்லை என அதீத மன உளைச்சலுக்கு ஆளாகி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என கூறுகிறார்கள்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸை வைத்துள்ள, இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவென்யூ பகுதியில் தான் வசித்து வந்தார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட, நடிகை பவுலினின் சகோதரர் தினேஷ் தற்போது இவரது தற்கொலை குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் .போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் கைப்பட எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது.
இதை தொடர்ந்து பவுலினின் கடிதம் மற்றும் செல்போன், குடியிருப்பு சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை வைத்து அடுத்த கட்ட விசாரணையை துவங்கியுள்ள போலீசார் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த, இவரது காதலனான சிராஜூதின் என்பவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிபிடித்தக்கது.