விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது.
25
அண்ணன் - தம்பிகளின் பாச பிணைப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், அழகிய கூட்டு குடும்பத்தை பார்க்க முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அண்ணனை விட்டு கொடுக்காத, தம்பிகள்... தம்பிகளை விட்டுக்கொடுக்கத்த அண்ணன் என, ஒரு வானத்தை போல படத்தையே சீரியலாக பல ட்விஸ்டுடன் இயக்கி வருகிறார் இயக்குனர்.
இந்த சீரியல், முல்லை எகிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த, சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்ததால், அவருக்கு பதிலாக 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி, முல்லையாக நடித்து வந்தார்.
45
Pandian stores
தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகம் வந்து கொண்டிருப்பதால்... இவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலக முடிவு செய்துள்ளார். எனவே இவருக்கு பதிலாக யார் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில், தற்போது அந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லையாக நடிக்கப்போவது அபிநயா என்பவர் தானாம். இவர் இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா தோழியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பார்ப்பதற்கு கூட ஒரு ஜாடையில் சித்ரா போலவே இருக்கிறார். உண்மையில் இவர் தான் புதிய முல்லையாக நடிக்க உள்ளாரா? அல்லது வேறு யாராவது நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.