ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் படத்துக்கு அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், முதல் நாளில் வசூலை வாரிக்குவிக்க அனைத்து திரையரங்கிலும் அப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர். இதனால் அடுத்த வாரம் ஜெயிலர் மட்டும் சிங்கிளாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், ஜெயிலர் போன்ற பிரம்மாண்ட படத்திடம் சிக்காமல் இருக்க இந்த வாரமே தமிழில் 7 சிறு பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் விவரத்தை பார்க்கலாம்.
வெப்
நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் வெப். புதுமுக இயக்குனர் ஹரூன் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 4-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடித்துள்ளார்.
சுப்ரமணியபுரம் ரீ-ரிலீஸ்
சசிகுமார் இயக்கத்தில் 2008-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் சுப்ரமணியபுரம். ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்த இப்படம் வருகிற ஆக்ஸ்ட் 4-ந் தேதி தமிழகத்தில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
லாக்டவுன் டைரி
ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லாக்டவுன், விஹான் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் போன்ற அனுபவ நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படம் ஆக்ஸ்ட் 4-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
முருடன்
ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் முருடன். ராகவா நூலேதி இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சிதா படுகோன் ஹீரோயினாக நடித்துள்ளார். திகில் படமான இது வருகிற ஆகஸ்ட் 4-ந் தேதி திரைகாண உள்ளது.
சான்றிதழ்
மதுரை சம்பவம் படத்தின் நாயகன் ஹரிகுமார் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் சான்றிதழ், இதில் மறைந்த நகைச்சுவை நடிகர் மனோபாலா, நடிகர் ராதாரவி, அருள் தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.