மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவருக்கு தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் நடித்து வருகிறா பகத் பாசில். அது ஒருபுறம் இருக்க, தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங் ஸ்டார் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் பகத் பாசில். இதற்கு காரணம் அவர் வில்லனாக நடித்த மாமன்னன் படம் தான்.
இதைப்பார்த்ததும் ஓடோடி வந்த ரத்னவேலு பகத் பாசில் ரசிகர்கள், நஸ்ரியாவின் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர். அந்த புகைப்படம் பதிவிட்ட 18 மணிநேரத்திற்குள் 6 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெற்றுள்ளது. இதுதவிர கமெண்ட் செக்ஷனிலும், அகில இந்திய ரத்னவேல் மனைவி மக்கள் பாசறை என்றெல்லாம் பதிவிட்டு அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.
நடிகர் பகத் பாசிலும், நடிகை நஸ்ரியாவும் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, பின்னர் டிரான்ஸ் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு தெலுங்கில் நானிக்கு ஜோடியாக அடடே சுந்தரா என்கிற படத்திலும் நடித்திருந்தார்.