diya menon
கேரளாவில் பிறந்தவர் தியா மேனன். பள்ளிப்படிப்பை கேரளாவில் முடித்த இவர், கல்லூரியில் படிப்பதற்காக தமிழகம் வந்தார். கோயம்புத்தூரில் கல்லூரி படிப்பை முடித்த தியா மேனன் கடந்த 2015-ம் ஆண்டு மீடியாவுக்குள் நுழைந்தார். சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக களமிறங்கிய இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
diya menon
குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய கிரேஸி கண்மணி நிகழ்ச்சி அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. ரசிகர்கள் மத்தியிலும் கிரேஸி கண்மணியாக பேமஸ் ஆன தியா மேனன், சன் டிவியில் வணக்கம் தமிழா, சவாலே சமாளி, சூப்பர் சேலஞ் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
diya menon
திருமணம் முடிந்ததும் தியா மேனனும் சிங்கப்பூருக்கு குடியேறிவிட்டார். தற்போது அங்கு குடியுறிமையும் பெற்றுவிட்டார். தியா மேனன் - கார்த்திக் தம்பதிக்கு கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அவருக்கு பிறந்த முதல் குழந்தை இதுவாகும். இந்த குழந்தைக்கு கியாரா என பெயரிட்டுள்ளனர்.