தேசிங்கு பெரியசாமியை வெயிட்டிங் லிஸ்டில் போட்ட சிம்பு; கைமாறிய STR 49! பர்ஸ்ட் லுக் இதோ

Published : Feb 03, 2025, 08:44 AM IST

சிம்புவின் STR 49 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது அப்படம் வேறு இயக்குனருக்கு கைமாறி இருக்கிறது.

PREV
14
தேசிங்கு பெரியசாமியை வெயிட்டிங் லிஸ்டில் போட்ட சிம்பு; கைமாறிய STR 49! பர்ஸ்ட் லுக் இதோ
கைமாறிய சிம்பு படம்

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், இந்த ஆண்டு அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

24
வெயிட்டிங் லிஸ்டில் தேசிங்கு பெரியசாமி

தக் லைஃப் படத்தை தொடர்ந்து சிம்புவின் 49-வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற கேள்வி இருந்தது. ஏனெனில் அப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானாலும் அப்படம் குறித்து அடுத்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை. இதனால் அப்படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த படக்குழு, அப்படம் சற்று தாமதமாக உருவாகும் என்று விளக்கம் அளித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

34
STR 49 இயக்குனர் யார்?

தேசிங்கு பெரியசாமி படம் தாமதம் ஆவதால், சிம்புவின் 49வது படம் தற்போது வேறு இயக்குனருக்கு கைமாறி இருக்கிறது. அதன்படி ஹரிஷ் கல்யாணை வைத்து பார்க்கிங் என்கிற தரமான ஹிட் படத்தை கொடுத்த ராம்குமார் இயக்கத்தில் தான் சிம்பு நடிக்க இருக்கிறார். அதுதான் STR 49 படமாக உருவாக உள்ளது. அப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளார். இன்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

44
STR 49 பர்ஸ்ட் லுக்

அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு கையில் புத்தகத்துடனும் அந்த புத்தகத்திற்குள் கத்தி இருப்பது போன்ற ஸ்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் சிம்புவின் ரோல் நம்பர் 49 எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இப்படத்தில் நடிகர் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. அந்த போஸ்டரில் மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இது ஆக்‌ஷன் கலந்த கல்லூரி கதையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் இந்த ஆண்டே ரிலீஸ் ஆகும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதால், இந்த வருடம் சிம்புவுக்கு 2 படங்கள் வருவது உறுதியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... சிம்பு பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் நயன்தாரா; அடடே இதுதான் விஷயமா?

Read more Photos on
click me!

Recommended Stories