இந்தப் படம் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், ஆரவ், அர்ஜூன், த்ரிஷா மற்றும் ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் பற்றி ரெஜினா பேசியது இப்போது வைரலாகி வருகிறது. பட புரோமோஷனுக்காக ரெஜினா தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அதில் அவரிடம் சிவகார்த்திகேயன் பற்றி கேள்வி எழுப்பபட்டிருக்கிறது. அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நானும் சிவகார்த்திகேயனும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்திருந்தோம். இந்தப் படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் அப்போது எப்படி இருந்தாரோ அதே போன்று தான் இப்பவும் இருக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை.