எனக்கு தான்டா திமிர் ஜாஸ்தியா இருக்கணும் - பெருமை பேசிய இளையராஜா

Published : Feb 03, 2025, 07:27 AM ISTUpdated : Feb 03, 2025, 07:28 AM IST

உலகத்தில் எந்த ஒரு இசையமைப்பாளரும் செய்யாததை நான் செய்திருக்கிறேன் அதனால் எனக்கு தான் கர்வம் அதிகமாக இருக்க வேண்டும் என இளையராஜா கூறி இருக்கிறார்.

PREV
14
எனக்கு தான்டா திமிர் ஜாஸ்தியா இருக்கணும் - பெருமை பேசிய இளையராஜா
கலைக்கு அப்பாற்பட்ட இளையராஜாவின் இசை

இசைஞானி இளையராஜாவின் இசையை விரும்பி கேட்காத ஆளே இருக்க முடியாது. அந்த வகையில் தன்னுடைய இசையால் நிகழ்ந்த மேஜிக் பற்றி இளையராஜாவே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

அதில் ஒரு பாடல் என்பது தனி மனிதனுக்குள்ளே என்ன செய்யும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு, “என்னென்ன செய்யணுமோ அத செய்துகொண்டு இருக்கிறதா” என சிரித்தபடி பதிலளித்தார் இளையராஜா. பின்னர் பாடல் என்பது கலையின் வெளிப்பாடா? இல்லை அதற்கு அப்பாற்பட்டதா? என்கிற கேள்விக்கு பதிலளித்த இசைஞானி, “இவருக்கு ஒரு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது என்று தானே உணர்கிறீர்கள். அதுதான் உண்மை. உங்களை இந்த டியுன்ல நான் கட்டிப்போடுகிறேன்னு இசையமைப்பதில்லை. நான் ஹார்மோனியம் முன்பு எதோ வாசிக்கிறேன் அது உங்களை வந்து சேருகிறது. 

24
சிசுவுக்கு உயிர்கொடுத்த இசைஞானியின் இசை

உதாரணத்திற்கு ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயற்றில் உள்ள சிசு அசைவே இல்லாமல் இருந்த போது, என்னுடைய திருவாசகம் இசை உயிரைக் கொடுத்திருக்கிறது. குழந்தை அசைவில்லை என தெரிந்ததும் மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய சென்ற போது எனக்கு திருவாசகம் கேட்க வேண்டும் என அந்த தாய் கேட்டதும், அந்த திருவாசகத்தை பிளே செய்ததும் குழந்தைக்கு உயிர் வந்திருக்கிறது. திருச்சூரில் தூக்கமே வராமல் மதம் பிடிக்கும் நிலைமைக்கு சென்ற யானைக்கு, மலையாளத்தில் நான் இசையமைத்த தாலாட்டு பாட்டை யானைப் பாகன் பாடியதை கேட்டதும் அந்த யானை தூங்கிவிட்டது. இது எப்படி சாத்தியமாகும்.

இதையும் படியுங்கள்...கையில் காசில்ல; இளையராஜாவுக்கு சம்பளமாக மனைவியின் தாலியை கொடுத்த தயாரிப்பாளர்!

34
யானைகளே விரும்பி கேட்ட இளையராஜா பாடல்

அதேபோல் ஒரு டூரிங் தியேட்டரில் நான் இசையமைத்த ஒரு குறிப்பிட்ட பாடல் வரும்போது மட்டும் அதை கேட்க காட்டுக்குள் இருந்து ஒரு யானை கூட்டம் தினசரி வந்துள்ளது. வரும் வழியில் உள்ள வயல் வெளிகளையும், பயிர்களையும் சேதாரம் செய்யாமல் தியேட்டர் முன் வந்து அந்த பாடல் வரும் வரை காத்திருந்து அதை கேட்டுவிட்டு, மீண்டும் காட்டுக்குள் சென்றிருக்கிறது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடலை கேட்க தான் அந்த யானை கூட்டம் வந்திருக்கிறது. 

44
இளையராஜா ஓபன் டாக்

உலகத்துல எந்த தலைசிறந்த காம்போசருடைய வாழ்க்கையிலாவது இது நடந்திருக்கா... அது எனக்கு நடந்திருக்கிறது என்றால் அது இசைக்கும் அப்பாற்பட்ட சக்தியால் தான். இதை நான் சொன்னால், அவருக்கு கர்வம் ஜாஸ்தினு சொல்வார்கள். எனக்கு வராம வேற யாருக்குடா வரும்... கர்வம் எனக்கு தான்டா வரணும். எனக்கு தான் திமிரு ஜாஸ்தியா இருக்கணும். ஏனென்றால் உலகத்தில் யாரும் செய்யாததை, செய்ய முடியாததை நான் செஞ்சிட்டு இருக்கேன். இதை நினைக்கும் போது எனக்கு திமிரு இல்லாம இருக்குமா.... எனக்கு திமிருனு சொல்றவனுக்கு எவ்ளோ திமிரு இருக்கணும். நல்லா ஒரு வேலையை செய்தால் தான் கர்வம் வரும். நீ ஒன்னுமே செய்யாமல் இருந்துட்டு அவருக்கு மட்டும் கர்வம் இருக்குனு சொன்னா.. இருக்க தான் செய்யும். விஷயம் இருப்பவனிடம் கர்வம் இருக்காதா.." என இளையராஜா பேசி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...'என் இனிய பொன் நிலாவே' பாடல்; மகனால் இளையராஜாவுக்கு வந்த சிக்கல்? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories