விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சங்கீதாவும், அரவிந்தும் காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.
சின்னத்திரை சீரியல்களில் நடித்த நடிகர், நடிகைகள் காதல் திருமணம் செய்துகொள்வது தொடர்கதை ஆகி வருகிறது. ஏற்கனவே செந்தில் - ஸ்ரீஜா, சஞ்சீவ் - ஆல்யா மானசா, சித்து - ஸ்ரேயா, வெற்றி வசந்த் - வைஷ்ணவி என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், அந்த பட்டியலில் லேட்டஸ்டாக ஒரு ஜோடி இணைந்துள்ளது. அவர்கள் தான் அரவிந்த சேஜு - சங்கீதா சாய் ஜோடி. இவர்கள் இருவரும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்திருந்தனர்.
24
சீரியல் நடிகை சங்கீதா சாய் திருமணம்
அந்த தொடரில் சங்கீதா சாய், மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டு இளசுகளால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சங்கீதா சாய் தான். அந்த தொடரிலேயே சங்கீதாவிடம் பயிலும் மாணவனாக நடித்திருந்தார் அரவிந்த் சேஜு. அந்த தொடரில் நடித்தபோது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த காதலுக்கு பெற்றோர் கிரீன் சிக்னல் காட்டியதால் தற்போது இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
சங்கீதா சாய் - அரவிந்த் சேஜு ஜோடியின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சங்கீதா - அரவிந்த் ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் கனா காணும் காலங்கள் முதல் சீசனில் நடித்த ராஜ வெற்றி பிரபுவும், தீபிகாவும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அவர்களைப் போல் சங்கீதா - அரவிந்த் ஜோடியும் வெற்றிகரமாக திருமண பந்தத்தில் இணைந்துள்ளது.
44
சங்கீதாவை காதலித்து கரம்பிடித்தார் அரவிந்த்
சங்கீதா மதுரையில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் ஐடி கம்பெனியில் வேலைபார்த்து வந்த இவர் பின்னர் சன் மியூசிக்கில் விஜேவாக பணியாற்றி, படிப்படியே சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதேபோல் அரவிந்த் சேஜு, கனா காணும் காலங்கள் சீரியலுக்கு பின்னர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அரவிந்த் சேஜுவுக்கு ஜோடியாக நடிகை மதுமிதா நடிக்கிறார்.