ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : Feb 03, 2025, 08:01 AM IST

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ள நடிகர் சிம்புவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

PREV
16
ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சிம்பு பிறந்தநாள்

தமிழ் திரையுலகில் பன்முகக் கலைஞனாக வலம் வந்த டி.ராஜேந்தரின் மகன் தான் சிம்பு. இவர் 1983-ம் ஆண்டு பிறந்த நிலையில் 2 வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். டி.ராஜேந்தர் இயக்கிய உறவை காத்த கிளி படம் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக எண்ட்ரி கொடுத்த சிம்புவுக்கு சிறுவயதிலேயே லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டமும் கிடைத்தது. இதையடுத்து 2002-ம் வெளிவந்த காதல் அழிவதில்லை படம் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்து தனது விரல் வித்தைகளை காட்டத்தொடங்கினார் சிம்பு.

26
டி.ராஜேந்தர் மகன் சிலம்பரசன்

நட்சத்திரத்தின் வாரிசாக இருந்ததால் சிம்புவுக்கு ஆரம்ப காலகட்டத்தில் எளிதாக பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தொடர்ச்சியாக சிம்புவின் படங்கள் சந்தித்த தோல்விகள் அவரது திரைப்பயணத்தை கேள்விக்குள்ளாக்கின. திறமைகளுக்கு பஞ்சமில்லாத சிம்பு, தனக்கான பாதையை கண்டறிய முடியாமல் தடுமாறினார். அது சிம்புவுக்கு தோல்வியை மட்டும் பரிசளிக்காமல் அவரை சுற்றிய பல சர்ச்சைகளுக்கும் வித்திட்டது.

36
லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு

வித்தைகள் மட்டும் காட்டத்தெறிந்த சிம்புவின் விரல்கள் முதன்முறையாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் மெளனங்களை படரவிட்டன. சிம்புவின் விரல்களுக்கு பதிலாக எழுத்தால் கெளதம் மேனனும், இசையால் ஏ.ஆர்.ரகுமானும் தங்களது விரல்களில் சுடரேற்றி சிம்புவுக்கு விண்ணைத்தொடும் வெற்றியை கொடுத்தனர். ஆனாலும் சிம்புவின் தவறான கதைத் தேர்வுகளும், அவரை சுற்றிப் பின்னப்பட்ட சிலந்தி வலைகளும் மீண்டும் அவரது திரைப்பயணத்தை கேள்விக்குறியாக்கின.

இதையும் படியுங்கள்... சிம்பு பிறந்தநாளன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் நயன்தாரா; அடடே இதுதான் விஷயமா?

46
சிம்புவின் கம்பேக்

தொடர்ந்து தன் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளின் வழியே, பலம் பொருந்திய ஆத்மனாக மீண்டு வரும் சூட்சமத்தை சிம்பு நன்கு அறிந்திருந்தார். அதுவே மாநாடு படத்தின் வெற்றி மூலம் சிம்புவுக்கு புத்துயிர் அளித்திருந்தது. தெளிவான அரசியல், தேர்ந்த நடிப்பு என மாநாடு படத்தின் மூலம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்ட சிம்பு, அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என தன் பல பரிணாமங்களை காட்டி மக்களை மகிழ்வித்தார்.

56
சிம்பு லைன் அப்

தற்போது தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோவாக வலம் வரும் சிம்பு தன் கைவசம் 4 படங்களை வைத்திருக்கிறார். அதில் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர தேசிங்கு பெரியசாமி, பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் ஒரு படம் என சிம்புவின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது.

66
சிம்பு சொத்து மதிப்பு

இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் சிம்புவுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ.30 முதல் ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூ.200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கார்கள் மீதும் அலாதி பிரியம் கொண்ட சிம்புவிடம் டொயோட்டா வேல்பயர், மினி கூப்பர் உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்... ரீ-ரிலீஸ் ஆன சிம்புவின் மாநாடு; அதுவும் இத்தனை தியேட்டர்களிலா?

Read more Photos on
click me!

Recommended Stories