கலக்கிய எம்ஜிஆர்; காத்துவாங்கிய கமல்... நடிகர்களின் கட்சிகள் முதல் தேர்தலில் வாங்கிய ஓட்டு சதவீதம் ஒரு பார்வை

Published : Apr 22, 2026, 12:39 PM IST

எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பவன் கல்யாண் என நடிகர்கள் தொடங்கிய அரசியல் கட்சிகள் முதல் தேர்தலில் எந்த அளவுக்கு வாக்கு சதவீதம் பெற்றிருக்கின்றன என்பதை பார்க்கலாம்.

PREV
18
Actors Political Party First Election Stats

தென்னிந்தியாவை பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரிக்கவே முடியாது. சினிமாவில் கோலோச்சிய நடிகர்கள் பலர் அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர்கள் தொடங்கிய அரசியல் கட்சிகள் என்னென்ன? அந்த கட்சிகள் போட்டியிட்ட முதல் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் என்ன? அவை எத்தை தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

28
எம்ஜிஆர்

முதன்முதலில், கட்சி தொடங்கிய நடிகர் என்றால் அது எம்.ஜி.ஆர் தான். அவர் கடந்த 1977ஆம் ஆண்டு தொடங்கிய அதிமுக கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போது நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகள் 51,94,876 ஆகும். மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 130 இடங்களை கைப்பற்றி, 30.4% வாக்குகளைப் பதிவு செய்தது. ஒரு நடிகருக்கு தமிழ்நாட்டில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

38
என்.டி.ஆர்

அதனைத் தொடர்ந்து, ஆந்திராவில் கடந்த 1985ஆம் ஆண்டு என்.டி.ஆர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி 1,06,25,508 வாக்குகள் பெற்று, 250 தொகுதிகளில் 202 இடங்களை வென்றது. அந்த தேர்தலில் மட்டும் 46.2 சதவீத வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்தது தெலுங்கு தேசம் கட்சி.

48
விஜயகாந்த்

தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி, முதல் தேர்தலிலேயே 27,64,223 வாக்குகள் பெற்றாலும், 232 தொகுதிகளில் வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் அக்கட்சிக்கு 8.4% வாக்கு சதவீதம் இருந்தாலும், அது வெற்றியாக மாறவில்லை.

58
சிரஞ்சீவி

பின்னர் 2009ஆம் ஆண்டு சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்ஜியம் கட்சி 68,63,509 வாக்குகள் பெற்று, 288 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி வாகை சூடியது. அந்த தேர்தலில் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு 16.3 சதவீத வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் சில ஆண்டுகளிலேயே அவர் அரசியலை விட்டு விலகிவிட்டார்.

68
பவன் கல்யாண்

2019ஆம் ஆண்டு பவர் ஸ்டார் பவன் கல்யாண் தொடங்கிய ஜனசேனா கட்சி 17,36,811 வாக்குகள் பெற்றாலும், 137 தொகுதிகளில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. வாக்கு சதவீதம் 5.5% ஆக இருந்தது. இதையடுத்து 2024-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி மாபெரும் வெற்றியை பெற்றதோடு, பவன் கல்யாண் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

78
கமல்ஹாசன்

2021ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி 12,10,002 வாக்குகள் பெற்றது. ஆனால் 180 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியாமல் போனது. அக்கட்சிக்கு, 2.6 சதவீத வாக்குகள் கிடைத்தது. அந்த தேர்தலில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட்டு வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

88
விஜய்

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் எந்த அளவுக்கு மக்கள் ஆதரவை பெறும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதுவரை நடிகர்கள் தொடங்கிய கட்சிகளின் தரவுகள் பார்க்கும்போது, மக்கள் ஆதரவு இருந்தாலும் அதை வெற்றியாக மாற்றுவது சவாலாகவே இருந்து வருகிறது. அதனால், 2026 தேர்தலில் விஜயின் கட்சி எந்த அளவுக்கு தாக்கம் செலுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories