சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். 2டி நிறுவனம் தயாரித்து இருந்தது. அதேபோல் இப்படத்துக்கு போட்டியாக சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியானது. இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து இருந்தது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
24
ரெட்ரோ - டூரிஸ்ட் பேமிலி பாக்ஸ் ஆபிஸ்
ரெட்ரோ திரைப்படம் ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ரெட்ரோ திரைப்படம் 66 கோடி வசூலித்து இருந்தது. அதேபோல் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இப்படம் வெறும் 7 கோடி பட்ஜெட்டில் தான் தயாரிக்கப்பட்டது. அதனால் தயாரிப்பாளருக்கு இப்படம் அதிகளவில் லாபம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
34
ரெட்ரோவை முறியடித்த டூரிஸ்ட் பேமிலி
விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த படைத்தலைவன் திரைப்படம் வருகிற மே 23-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்ரீதர் பேசுகையில், ரெட்ரோ படத்தை டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வசூலில் முந்திவிட்டதாக கூறினார். சசிகுமார் தொடர்ந்து இதுபோன்று பல படங்களை கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ரெட்ரோ படம் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதை படக்குழுவே அறிவித்தது. அதேபோல் டூரிஸ்ட் பேமிலி படம் 50 கோடி வசூலை கடந்ததாக கூறப்பட்டது. பிறகு எப்படி ரெட்ரோவை டூரிஸ்ட் பேமிலி முந்தி இருக்கும் என சூர்யா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை அவர் அதிக ஷேர் கிடைத்த படமாக டூரிஸ்ட் பேமிலி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இருக்கலாம். ஏனெனில் ரெட்ரோ அதிக பட்ஜெட்டில் உருவான படம், அதே வேளையில் டூரிஸ்ட் பேமிலி கம்மி பட்ஜெட்டில் வெளியாகி அதிக லாபத்தை கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.