இட்லிகடை தயாரிப்பாளருக்கு ED வைத்த செக்; ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் திடீர் ரெய்டு - பின்னணி என்ன?

Published : May 16, 2025, 11:30 AM IST

ஒரே நேரத்தில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என மூன்று ஸ்டார் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

PREV
14
Who is this Akash Bhaskaran? Why is there an ED raid at his house?

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கே.பி.என் தாசன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தான் ஆகாஷ் பாஸ்கரன் வசித்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

24
யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் தான் ஆகாஷ் பாஸ்கரன். இவர் டான் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. கவின்கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் 3வது மகளான தாரணியை தான் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் செய்துகொண்டார். தாரணி கவின்கேர் நிறுவனத்தை நிர்வகித்து வருவது மட்டுமின்றி சொந்தமாக மூன் பேக்ஸ் என்கிற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

34
இயக்குனராக அறிமுகமாகும் ஆகாஷ் பாஸ்கரன்

ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தான் முன் நின்று நடத்தி வைத்தனர். மேலும் இவர்கள் திருமணத்தில் உதயநிதி ஸ்டாலினி, அன்பில் மகேஷ் போன்ற அரசியல் பிரபலங்களும், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், அட்லீ, விக்னேஷ் சிவன், நயன்தாரா போன்ற திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். அவரின் முதல் படமான இதயம் முரளி விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

44
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் படங்கள்

ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அதில் ஒன்று அவர் இயக்கும் இதயம் முரளி. இதில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடிக்கும் பராசக்தி, தனுஷி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லிகடை, ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்க உள்ள எஸ்.டி.ஆர்.49 போன்ற படங்களை ஆகாஷ் பாஸ்கரன் தற்போது தயாரித்து வருகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories