Abram Khan & Aryan Khan
ஆர்யன் கான் மற்றும் அபிராம் கான் இடையே மிகப்பெரிய வயது வித்தியாசம் உள்ளதால், இவர்களுடைய அன்பு சகோதர்கள் என்பதை தாண்டி, தந்தை மகன் போன்றது.
பல சமயங்களில் ஆர்யன் மற்றும் அபிராம் ஒன்றாகவே தான் இருப்பார்கள். தன்னுடைய தம்பி மீதான அன்பை பல முறை ஆர்யன் கான் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
Abram Khan & Aryan Khan
ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகர், கௌரி கானும் குடும்பம் மற்றும் சில தொழில்களை கவனித்து வருகிறார். அப்படி பட்ட நேரங்களில் அபிராமுடன் அதிக நேரத்தை செலவிட்டு, அவரை தந்தை ஸ்தானத்தில் இருந்து கவனித்து கொள்வது ஆர்யன் கான் தான்.
Abram Khan & Aryan Khan
நவம்பர் 13, 1997 இல் பிறந்த ஆர்யான் கான் மற்றும் 27 மே 2013 இல் பிறந்த அபிராம் கான் ஆகியோருக்கு 16 வயது வித்தியாசம் உள்ளது.
பல நேரங்களில் சுஹானா கான் கூட ஒரு தாயை போல் தான் அபிராமை கவனித்து கொள்வார். இதையும் அவர் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவது வழக்கம்.
தற்போது சுகானா வெளிநாட்டில் படித்து வருவதால், ஆரியன் கான் தான் எப்போதும் சகோதரருடன் இருந்து வந்தார். ஆனால் அவர் தற்போது போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடிக்கப்பட்டுள்ளதால் தன்னுடைய சகோதரரை பார்க்க முடியாமல் அபிராம் தவித்து வருவதாக கூறப்படுகிறது.