ரசிகர்களை கவரும் சாய் பல்லவியின் நீண்ட கூந்தலின் ரகசியம் என்ன? எப்படி பராமரிக்கிறார்... முழு விவரங்கள் இதோ...

First Published | Oct 9, 2021, 12:49 PM IST

சாதாரணமாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நீண்ட முடி இருந்தாலே அதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானது. ஆனால் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி (Saipallavi), தன்னுடைய நீண்ட முடியோடு நடித்து, ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவருடைய தலை முடி பராமரிப்பு ராசசியம் குறித்த தகவல்கள் இதோ...

அதிக மேக்கப் இல்லாமல், கவர்ச்சி காட்டாமல், நீண்ட தலைமுடியோடு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களை கவர்ந்து வருபவர் சாய் பல்லவி. குறிப்பாக சாய் பல்லவியின் அழகான முடி மற்றும் அதன் அடர்த்தி, பல பெண் ரசிகர்களின் கவனத்தையும் கவர்கிறது.

அழகான சுருள் நீண்ட கூந்தல், இவரது ஒவ்வொரு திரைப்படங்களிலும் இவரை மேலும் அழகாக மாற்றுகிறது. சாய் பல்லவியின் தலைமுடி அவரது ஆளுமையின் சிறப்பம்சங்களில் ஒன்று என்றும் சொல்லலாம். அவரது நீண்ட கூந்தலின் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க...

Tap to resize

சாய் பல்லவி ரசாயனம் கலந்த ஷாம்பூ போன்றவற்றை உபயோகிப்பதை தவிர்த்து, இயக்கையான பொருள்களால் தயாரிக்க கூடிய பொருள்களையே அதிகம் பயன்படுத்துகிறார். குறிப்பாக தன்னுடைய தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பில், இயற்க்கை பொருட்களை தான் பயன்படுத்துகிறார்.

ஒரு நேர்காணலில், சாய் பல்லவி தன்னுடைய அழகு பராமரிப்புக்கு காரணம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது என்பதையும் தெரிவித்திருந்தார்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய நீண்ட கூந்தலை வாஷ் பண்ணுவது. தன் முடி உதிர்ந்துவிடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் சரியான முறையில் மெயின்டைன் செய்கிறார். கற்றாழை சாய் பல்லவியின் சிறந்த நண்பர் என்றே கூறலாம். தலைமுடி மற்றும் தன்னுடைய சருமத்திற்கு அலோ வேராவைப் அதிகம் பயன்படுத்துகிறார்.

ஆரோக்கியமான இயற்க்கை உணவு, இயற்க்கையின் வரப்பிரசாதமான கற்றாழையை சருமம் மற்றும் தலை முடிக்கு பயன் படுத்துவது தான் இவரது பளபளப்புக்கு காரணம். அதே போல், தலை முடியில் ஹேர் கலரிங், போன்ற வற்றை முற்றிலும் தவிர்த்து விடுவார் சாய் பல்லவி.

சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் ஸ்டோரி படத்திலும் தன்னுடைய அதிகம் மேக்அப் போடாத அழகால் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபுவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய்ப்பளவி நடித்தார். படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகைகள் என்றால் கவர்ச்சி கட்டவேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உடைத்து, தனது பருக்கள் மற்றும் அதிக கவர்ச்சி காட்டாமல் திரையுலகில் நிலையான இடத்தை பிடித்துள்ளார் சாய் பல்லவி.

Latest Videos

click me!