'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் (Nelson) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் (Priyanka Arul Mohan ) தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு (Yogibabu ), வினய் (vinay )உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்துள்ளது.
ராக் ஸ்டார் அனிருத் (anirudh) இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து வெளியான ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் மற்றும் 'so baby ' ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ஒருவழியாக அக்டோபர் 9 ஆம் தேதி (இன்று) படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களின், எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக, தற்போது வெளியாகியுள்ள டாக்டர் படத்தை, சிவகார்த்திகேயன், அனிருத், ஆகியோர் ரசிகர்களுடன் திரையரங்கில் சென்று பார்த்துள்ளனர்.
தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாய்க்கியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு காலை முதலே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.