தென்னிந்திய சூப்பர் நாயகர்கள் மற்றும் நாயகிகள் அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி இதுவரை திருமணத்திற்கு பிறகு காதல் கிசுகிசுவில் சிக்கிய சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பிரபு தேவாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருந்த நிலையில் நயன்தாராவுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து தனது மனைவியை விவகாரத்தும் செய்தார் பிரபுதேவா. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மனக்கசப்பு காரணமாக பிரபுதேவா மற்றும் நயன்தாரா இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமாகி விட்டது. அதேபோல பிரபு தேவாவும் மறுமணம் செய்து கொண்டார்என கூறப்படுகிறது.
25
dhanush - Shruti Haasan
தனுஷ் மற்றும் சுருதிஹாசன் மூன்று படப்பிடிப்பின் மூலம் இவர்களிடையே காதல் மலர்ந்ததாக அப்போது பேச்சு அடிபட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்த இந்த படத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பின்னர் சிறிது காலத்தில் அந்த செய்தி மறைந்து போனது.
கமலஹாசன் மற்றும் கௌதமி இருவரும் பல வருடங்களாக உறவில் இருந்தனர். சரிகாவை பிரிந்த கமலஹாசன் கௌதமியுடன் காதல் கொண்டு இருந்தார். உண்மையில் அவர் வாணி கணபதியை திருமணம் செய்த போது சரிகாவை காதலித்ததாக கூறப்படுகிறது. தற்போது கௌதமியையும் பிரிந்து விட்டார் கமல்.
நாக சைதன்யாவுடன் விவகாரத்திற்கு பிறகு சமந்தா குறித்த பல கிசுகிசுக்கள் எழுந்தன. அவர் தனது ஒப்பனையாளர் ப்ரீதம் ஜுகல்கருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது, இருப்பினும் அவர் அனைத்தையும் வதந்திகள் என கூறி முறியடித்தார்.
55
samantha
நாகார்ஜுனா மற்றும் தபு குறித்தும் இதே போன்ற காதல் கிசுகிசுகள் எழுந்தன. 2006 ஆம் ஆண்டு நாகார்ஜுனாவும் தபுவும் காதலித்துள்ளனர் என வதந்திகள் கிளம்பியது. இருப்பினும் பின்னர் நாகார்ஜுனாவின் மனைவி அமலா அனைத்து அறிக்கைகளையும் மறுத்து இருந்தார்.