சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார். இதில் நானே வருவேன் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் அமைந்த படங்களில் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகியுள்ள நானே வருவேன் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டு இருக்கின்றது.