ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சிறப்புத் தோற்றங்கள் தவிர்த்து 40க்கும் மேற்பட்ட படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ஆனால் இவற்றில் இரண்டு பிளாக்பஸ்டர்கள் மட்டுமே உள்ளன. அதுவும் அவருடன் நடித்த ஹீரோக்களால் கிடைத்த வெற்றி. அதேசமயம் தோல்விப் பட்டியலைப் பார்த்தால் 20க்கு மேல் இருக்கும்.
மேலும் செய்திகளுக்கு...இந்தியன் 2- விற்காக கெட்டப்பை வேற லெவலில் மாற்றிய கமல்..லீக்கான போட்டோஸ் இதோ
1999 இல், ஐஸ்வர்யா ராய் முன்னணி நடிகையாக மூன்று படங்களில் தோன்றினார். இவற்றில் 'ஆ அப் லாட் சாலன்' தோல்வியடைந்தது. 'ஹம் தில் தே சுகே சனம்' ஹிட்டாகி, 'தால்' செமி ஹிட்டானது
2000 ஆம் ஆண்டில், ஐஸ்வர்யா ராய் முன்னணி நடிகையாக நான்கு படங்களில் நடித்தார். இவற்றில், 'ஜோஷ்', 'ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹை' பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக இருந்தன, 'தாய் அக்ஷர் பிரேம் கே' தோல்வியடைந்தது மற்றும் 'மொஹப்பதீன்' பிளாக்பஸ்டர்.