சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் ப்ளாக்ஃபாஸ்டர் படமாக அமைந்தது. 400 கோடிகளுக்கு மேல் வசூலித்ததோடு 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்திற்காக தடபுடலாக தயாராகி வருகிறார் கமல்.
24
indian 2
இதற்காக அமெரிக்காவிற்கு சென்று உடல் மாற்றத்தை மேற்கொண்டு உள்ளாராம். முந்தைய இந்தியன் படம் போலவே இரு வேறு வேடங்களில் நடிக்க உள்ளதால் இளமை தோற்றத்திற்காக தன்னை மிகுந்த தயாரிப்பிற்கு உள்ளாகி வருகிறார் கமல் ஹாசன்.
அந்த வகையில் சமீபத்தில் தன்னை இளமை தோற்றத்திற்கு ஏற்ப மாற்ற உறுதுணையாக இருந்த ஜிம் கோச்சுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார் கமல். அந்த புகைப்படத்தில் இளமை திரும்பிய தோற்றத்துடன், ஆம்ஸ்களுடன் அழகாக தோற்றமளித்திருந்தார். அதில் கமலஹாசன் தேவர்மகன் போல மீசை வைத்திருந்தார்.
44
kamal haasan
தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் தாடி மீசை என அனைத்தையும் எடுத்துவிட்டு 90கள் நாயகனாக திரும்பி உள்ளார் கமலஹாசன். இந்த புகைப்படத்தை அவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியன் 2 படத்தில் கமலுடன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.