மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே..பதற்றத்தில் ரசிகர்கள் !

Published : Sep 28, 2022, 07:59 AM ISTUpdated : Sep 28, 2022, 08:04 AM IST

தீபிகா மன அழுத்தத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

PREV
14
 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே..பதற்றத்தில் ரசிகர்கள் !
deepika padukone

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு சமீபத்தில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீபிகாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பலகட்ட பரிசோதனையின் காரணமாக அவர் அரை நாள் வரை மருத்துவமனையில் இருந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

24
deepika padukone

பின்னர் தீபிகா மன அழுத்தத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு பின் தீபிகா இப்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளுக்கு...மகனுக்கு இதய நோய்...7 மணிநேரம் ஆப்ரேஷன் மனமுடைந்த நடிகை கனிகா உருக்கம்

34
deepika padukone

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ப்ராஜெக்ட் ஏ படப்பிடிப்பின் போது தீபிகா படுகோனுக்கு இதயத்துடிப்பு அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.  மருத்துவர்கள் பரிசோதனையில் வாயு தொடர்பான பிரச்சனை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் மீண்டும் ப்ராஜெக்ட் கே  படபிடிப்பில் கலந்து கொண்டார் தீபிகா படுகோன். 

44
deepika padukone

தற்போது இவர் ஷாருக்கான் உடன் பதான் படத்தில் நடித்த வருகிறார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தில் ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதிவெளியாக உள்ளது. அதோடு ஹிந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா... 170 ஆவது படத்திற்கு ரஜினிக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?

பதான படத்தோடு கிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர் படத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபாஸ் மற்றும் அமிதாபச்சன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்திலும் முக்கிய வேடத்தில் வரும் தீபிகா படுகோன் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,

click me!

Recommended Stories