ரூ.400 கோடி பட்ஜெட்.. ரூ.150 கோடி சம்பளம்! தளபதி 68 குறித்து தீயாய் பரவும் தகவல் - இயக்கப்போவது யார் தெரியுமா?

Published : Dec 21, 2022, 07:38 AM IST

தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கே இன்னும் தொடங்கப்படாத நிலையில், விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படம் குறித்த தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 

PREV
15
ரூ.400 கோடி பட்ஜெட்.. ரூ.150 கோடி சம்பளம்! தளபதி 68 குறித்து தீயாய் பரவும் தகவல் - இயக்கப்போவது யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். தில் ராஜூ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இது நடிகர் விஜய்யின் 66-வது படமாகும்.

25

இதையடுத்து விஜய்யின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் இவர்கள் இருவரும் இணையும் படம் இது என்பதால் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின்னர் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... நயன்தாரா குழந்தை பெற்றது முதல்... தனுஷ் விவாகரத்து வரை..! 2022 ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்!

35

தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கே இன்னும் தொடங்கப்படாத நிலையில், விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி இப்படத்தை நடிகர் விஜய்யின் பேவரைட் இயக்குனரான அட்லீ இயக்க உள்ளார். இவர்கள் இருவர் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன.

45

தளபதி 68 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி என்றும் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.150 கோடி சம்பளமும், இயக்குனர் அட்லீக்கு ரூ.50 கோடி சம்பளமும் வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

55

இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் அட்லீ பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 40 ஆண்டுகளுக்கு பின் கசின் சிஸ்டரை கண்டுபித்த நடிகை வனிதா விஜயகுமார்? நடிகையுடன் போட்ட பதிவு வைரல்!

Read more Photos on
click me!

Recommended Stories