நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரம்:
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ள நயன்தாரா, இந்த ஆண்டு ஜூன் மாதம் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் ஆன 4 மாதத்திலேயே தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாக இவர்கள் போட்ட பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியது.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டதாக இவர்கள் கூறிய விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்க்கு காரணம், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், சில விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளை நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்த விசாரணை குழு... நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி எவ்வித விதி மீறலிலும் ஈடுபடவில்லை. இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், முறையான அனுமதியோடு தான் குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.