விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட கமல்ஹாசன்... நைசாக ஆண்டவருக்கே டிமிக்கி கொடுத்த தளபதி..!

First Published | Feb 1, 2023, 9:19 AM IST

விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிக்கும் முடிவை நடிகர் கமல்ஹாசன் கைவிட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. 

கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு ரிலீசான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. கமல்ஹாசனுக்கு கம்பேக் படமாகவும் விக்ரம் அமைந்தது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படம் தயாராகி வருகிறது. 

தளபதி 67-ல் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கிறார். இதில் விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், சாண்டி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதுதவிர இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது.

இதையும் படியுங்கள்... 25 வயது நடிகையுடன் டேட்டிங்..! மீண்டும் பிளே பாய் ஆக வலம் வருகிறாரா சமந்தாவின் மாஜி கணவர்?

Tap to resize

ஆனால் தற்போது கமல்ஹாசன், தளபதி 67 படத்தில் நடிக்கும் முடிவை கைவிட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. ஏனெனில், தளபதி 67 படத்தில் கேமியோ ரோலில் நடித்து, அப்படியே விஜய்யின் அடுத்த படத்துக்கான கால்ஷீட்டை வாங்கி, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கலாம் என்று ஸ்கெட்ச் போட்டு இருந்தாராம் கமல்ஹாசன்.

ஆனால் அதற்கு செவிசாய்க்காத விஜய், கால்ஷீட் கொடுக்காமல் நைசாக நழுவிவிட்டாராம். இதனால் தளபதி 67-ல் நடிக்கும் முடிவில் இருந்து கமல்ஹாசன் பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. கமலுக்கே கால்ஷீட் இல்லை என விஜய் கூறியதாக பரவும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அட்ஜஸ்மெண்ட் செய்தால் பட வாய்ப்பு... திரையுலகில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து மனம்திறந்த நயன்தாரா

Latest Videos

click me!