vijay
தமிழ் திரையுலகில் விடாமுயற்சியால் முன்னேறிய நடிகர்களுள் நடிகர் விஜய்யும் ஒருவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் அவர் நடிக்கும் படங்கள் தற்போது பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்யப்பட்டு பிற மாநிலங்களிலும் பட்டைய கிளப்பி வருகின்றன.
vijay
தற்போது நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லியோ பட ஷூட்டிங் முடிந்ததும், அடுத்ததாக விஜய் நடிப்பில் தளபதி 68 திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார்.
vijay
அந்த அளவுக்கு அந்த விழாவில் விஜய்யை புகழ்ந்து பேசிய பலரும் அவரின் அரசியல் வருகைக்காக காத்திருப்பதாக கூறினர். விஜய்யும் தன்னுடைய பேச்சில் லைட்டாக அரசியல் வருகைக்கு ஹிண்ட் கொடுத்திருந்தார். இதையெல்லாம் பார்க்கும் போது அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் அரசியலில் நுழையலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
vijay
ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாகவும், அவர் அரசியல் கட்சி தொடங்கி அதற்காக வேலைகளை செய்ய உள்ளதால், வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள தளபதி 68 தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.