meera jasmine
லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த ரன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் மீரா ஜாஸ்மின். அப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், தன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
meera jasmine
பின்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் மீரா ஜாஸ்மின். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிகர் மாதவனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்தார் மீரா. இதில் இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி பெரியளவில் பேசப்பட்டது.
meera jasmine
இதையடுத்து மீண்டும் லிங்குசாமி உடன் கூட்டணி அமைத்த மீரா ஜாஸ்மின் அவர் இயக்கிய சண்டக்கோழி திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இப்படத்தில் ரெளடி பேபியாக நடித்து காமெடி காட்சிகளிலும் அசத்தி இருந்தார். இதனால் இப்படமும் வசூலை வாரிக்குவித்து நடிகை மீரா ஜாஸ்மினுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
meera jasmine
இதையடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்த மீரா ஜாஸ்மின். மீண்டும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த பின்னர் 40 வயதில் சினிமாவில் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். இவர் நடிப்பில் அண்மையில் விமானம் என்கிற திரைப்படம் வெளியானது.
meera jasmine
இதையடுத்து தற்போது தமிழில் சசிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் டெஸ்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இப்படத்தில் நடிகை நயன்தாரா, நடிகர்கள் சித்தார்த், மாதவன் ஆகியோருடன் சேர்ந்து நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.