சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு தாவிய விக்னேஷ் சிவன்... என்ன மனுஷன் இப்படி இறங்கிட்டாரு?

First Published | Jun 18, 2023, 2:02 PM IST

நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன், தற்போது சின்னத்திரைக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் விக்னேஷ் சிவன். இப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும், இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரெளடி தான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, அவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் போது அவரும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கிய விக்கி, கடந்தாண்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார். அந்த சமயத்தில் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தின் 62-வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் செம்ம குஷியில் இருந்த விக்னேஷ் சிவன் அப்படத்திற்கான பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்குவதாக இருந்தது.

இதையும் படியுங்கள்... அக்கவுண்டில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்துட்டு வந்துட்டேன்னே... பாவா லட்சுமணனுக்கு ஓடோடி வந்து உதவிய பாலா

Tap to resize

இதனிடையே ஷூட்டிங் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி அப்படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை நீக்கிவிட்டதாக பின்னர் தெரியவந்தது. இதனால் கடும் அப்செட்டில் இருந்த விக்கி, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து தனது அடுத்த படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவர் அடுத்ததாக லவ் டுடே படத்தில் நாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தான் தயாரிக்க உள்ளாராம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், திடீரென சின்னத்திரை பக்கம் தாவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காஃபி வித் டிடி நிகழ்ச்சி போல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒன்று விரைவில் தொடங்கப்பட உள்ளதாம். இந்நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் தான் தொகுத்து வழங்க உள்ளாராம். இதைக்கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள் என்ன விக்கி இதெல்லாம் என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... முதல் நாள் வசூலில் பாதி கூட கிடைக்கல... பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய ஆதிபுருஷ்! 2-ம் நாள் வசூல் இவ்ளோ தானா

Latest Videos

click me!