vijay
நடிகை விஜய் முதன்முறையாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவை நடத்தினார். சென்னையில் நேற்று நடைபெற்ற இவ்விழாவில் மொத்தம் 1339 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் காலை, மதியம் மற்றும் இரவு உணவும் ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் விஜய்.
vijay
இந்நிகழ்ச்சி நடைபெற்ற ஆர்.கே.கன்வென்ஷன் செண்டருக்கான வாடகை மட்டும் ஒரு நாளைக்கு ரூ.40 லட்சமாம். அதுபோக சாப்பாட்டு செலவு, வந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு தங்கும் வசதி, ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தது மட்டுமின்றி, இந்நிகழ்ச்சி திட்டமிட்டதை விட இரவு வரை நீடித்ததால், இரவு உணவும் அனைவரும் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ரூ.2 கோடிக்கு மேல் செலவாகி இருக்கும் என கூறப்படுகிறது.
vijay
இதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு மட்டும் வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார் விஜய். அந்த நெக்லஸின் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர மொத்தம் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 1339 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 66 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாம். இதில் மூன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இது தான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு! மாணவ - மாணவிகளிடம் விஜய் வைத்த கோரிக்கை!