முதல் நாள் வசூலில் பாதி கூட கிடைக்கல... பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய ஆதிபுருஷ்! 2-ம் நாள் வசூல் இவ்ளோ தானா

First Published | Jun 18, 2023, 1:01 PM IST

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோனும் நடித்திருந்தனர். மேலும் இராவணன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்திருந்தார். இப்படத்தை சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தனர். இப்படம் கடந்த ஜூன் 16-ந் தேதி திரைக்கு வந்தது.

ஆதிபுருஷ் படம் வெளியாகும் திரையரங்குகளில் ஒரு சீட் மட்டும் அனுமனுக்காக ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அப்படி அனுமனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையை மலரால் அலங்கரித்து அதற்கு திரையரங்கில் ரசிகர்கள் பூஜை செய்த நிகழ்வுகளும் அரங்கேறின. இப்படி பெரும் அலப்பறைக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ஆதிபுருஷ் திரைப்படம் விமர்சன ரீதியாக கடும் சறுக்கலை சந்தித்தது. முதல் காட்சி முடிந்ததும் இப்படத்திற்கு அதிகளவில் நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தன.

இதையும் படியுங்கள்... அம்பேத்கர், காமராஜர், பெரியார் மட்டுமில்ல இவரை பற்றியும் படிக்கனும் - விஜய்யின் பேச்சுக்கு வெற்றிமாறன் பதில்

Tap to resize

சில இடங்களில் நெகடிவ் விமர்சனம் கூறியவர்களை பிரபாஸ் ரசிகர்கள் தாக்கிய சம்பவமும் அரங்கேறின. இதுதவிர ஆதிபுருஷ் படக்குழு நெகடிவ் விமர்சனங்களை நீக்க நெட்டிசன்களிடம் ஆயிரக்கணக்கில் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவர்களால் நெகடிவ் விமர்சனங்களை தடுக்க முடியவில்லை. இது ஒருபுறம் இருக்கும் இப்படத்தின் முதல் நாள் வசூல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அதன்படி இப்படம் முதல்நாளில் ரூ.140 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. ரிலீசுக்கு முன்பே அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டதால் இந்த அளவு வசூல் ஈட்டி இருந்தது. முதல் நாள் வந்த நெகடிவ் விமர்சனங்கள் காரணமாக ஆதிபுருஷ் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் பயங்கர் அடி வாங்கி உள்ளது. முதல் நாளைவிட 50 சதவீதம் குறைவு, அதாவது இரண்டாம் நாளில் இப்படம் வெறும் ரூ.65 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் இப்படம் படுதோல்வியை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... நண்பா, நண்பிகளுக்காக விஜய் என்னென்ன செஞ்சிருக்காரு பாருங்க... தளபதியின் கியூட் மொமண்ட்ஸ் இதோ

Latest Videos

click me!