Published : Feb 21, 2025, 03:29 PM ISTUpdated : Feb 21, 2025, 05:15 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதன் உண்மை பின்னணியை பார்க்கலாம்.
இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். நாயகன் படத்திற்கு பின்னர் கமலும், மணிரத்னமும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைந்து பணியாற்றி உள்ள படம் இது என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
24
Thug Life Kamalhaasan
இதுதவிர அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, நாசர், அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளது. தக் லைஃப் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தக் லைஃப் திரைப்படத்தை இந்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். படக்குழுவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அறிவித்துவிட்டது. ஆனால் தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றும் முடிவில் படக்குழு உள்ளதாக செய்தி ஒன்று உலாவருகிறது. அதன்படி அப்படத்தை தள்ளிப்போடுவதற்கு பதிலாக முன்கூட்டியே ரிலீஸ் செய்யும் ஐடியாவில் உள்ளதாகவும். தக் லைஃப் படக்குழுவின் இந்த முடிவுக்கு கேரள திரைத்துறை அறிவித்துள்ள ஸ்டிரைக் தான் காரணம் என்றும் கூறப்பட்டது.
44
Thug Life Release Date Changed?
கேரளாவில் வருகிற ஜூன் மாதம் முதல் திரைத்துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் ஜூன் மாதம் முதல் அங்கு சினிமா ஷூட்டிங் மட்டுமின்றி புதுப்படங்களின் ரிலீசும் இருக்காது என கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்கு கேரளாவிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளதால், தக் லைஃப் திரைப்படத்தை ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே திரைக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், இதுபற்றி தக் லைஃப் படக்குழுவிடம் விசாரித்தபோது அந்த தகவல் துளியும் உண்மை இல்லை என்றும் படம் திட்டமிட்டபடி ஜூன் மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.