சூரி நாயகனாக நடித்த புதிய படம் 'மாமன்'. ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். திரையரங்குகளில் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'ஹ்ருதயம்' உள்ளிட்ட படங்களில் பாடல்களால் பிரபலமான ஹிஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
24
சூரியின் மாமன்
மேலும் கலை இயக்குனர் ஜி. துரைராஜ், படத்தொகுப்பு கணேஷ் சிவா, சண்டைப்பயிற்சி மகேஷ் மாத்யூ, நடன இயக்குனர் பாபா பாஸ்கர், உடை வடிவமைப்பாளர் எம். செல்வராஜ், பாடலாசிரியர் விவேக், உடை வடிவமைப்பாளர் பாரதி சண்முகம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் பணியாற்றி உள்ளது. பிரபல வெப் தொடரான 'விலங்கு' மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கி உள்ள முதல் திரைப்படம் மாமன். இப்படத்தின் கதை நடிகர் சூரி உடையது.
34
மாமன் பாக்ஸ் ஆபிஸ்
மாமன் திரைப்படம் கடந்த மே 16ந் தேதி சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. இந்த போட்டியில் வென்றது நடிகர் சூரி தான். சந்தானம் படத்துக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் சூரி நடித்த மாமன் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்ததால் அப்படம் இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த வாரம் ரிலீஸ் ஆன விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தைவிட சூரியின் மாமன் படத்துக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது.
மாமன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகும் நிலையில், அப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. உலகளவில் இப்படத்தின் வசூல் ரூ.25 கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் வெறும் 10 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் அதைவிட டபுள் மடங்கு வசூலித்துவிட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் ஒட்டுமொத்தமாகவே ரூ.20 கோடி தான் வசூலித்து இருந்தது. அந்த வசூலை ஒரே வாரத்தில் அடிச்சு தூக்கி இருக்கிறார் சூரி.