தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னிந்தியா முழுவதும், வட இந்தியாவிலும் கூட ரசிகர்கள் கொண்ட நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். நடிகரை விட, அவரிடம் இருக்கும் திறமையான கலைஞனைத்தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கும்போது, அவர் படத்திற்கு ஒரு கூடுதல் பலம் சேர்க்கிறார். ஆனால், தனி நாயகனாக நடித்த படங்களில் அவருக்கு பெரிய வெற்றிகள் என்பது குறைவு தான். '96', 'மகாராஜா' போன்ற சில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றுத்தந்திருக்கின்றன.
24
வசூலில் மந்தமான ஏஸ்
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் 'ஏஸ்' என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆறுமுககுமார் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் இந்தப் படம் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக வெளியாகியுள்ளது. இப்படம் வெளியான முதல் நாளில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் படத்தின் வசூல் கடும் சரிவை சந்தித்திருந்தது. இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக வெறும் 75 லட்சம் தான் வசூலித்து இருந்தது. விஜய் சேதுபதி போன்ற ஒரு முன்னணி நடிகருக்கு இது மிகவும் குறைவான வசூல்.
34
ஏஸ் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் எவ்வளவு?
இந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏஸ் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்த படியே நேற்றைய வசூல் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றுமட்டும் ஏஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ.1 கோடி வசூலித்து உள்ளது. ஆனால் கடந்த வாரம் வெளிவந்த சூரி நடித்த மாமன் திரைப்படம் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் ரூ.2.54 கோடி வசூலித்து உள்ளது. ஏஸ் படம் அதன் வசூலுக்கு கிட்ட கூட நெருங்க முடியவில்லை.
ஏஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், பப்லு பிரிதிவிராஜ், திவ்யா பிள்ளை, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கரண் பி. ராவத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பின்னணி இசை சாம் சி.எஸ். ஞாயிறுக்கிழமை இப்படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.