தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான படைப்புகளை இயக்கி, வெற்றி கண்டு வருபவர் இயக்குனர் வெற்றி மாறன். இந்நிலையில், இவரின் இயக்கத்தில் 'அசுரன்' படத்திற்கு பின்னர் வெளியான திரைப்படம் 'விடுதலை'. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நிறைவடைந்தது.
மேலும் இப்படத்திற்கு தன்னுடைய இசையால் பலம் செய்துள்ளார் இளையராஜா. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கனிம வளங்கள் நிறைத்த மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின், கனிம வளங்களை எடுக்க அரசாங்கம் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கிறது. இதனால் தங்களுடைய கனிமங்கள் வளங்கள் மட்டுமின்றி, தங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு, இருக்க கூட இடம் இல்லாமல் விரட்டியடிக்கப்படுவோமோ? என பயம் கொள்ளும் மக்கள், அரசாங்கத்திற்கு எதிராக திரும்புகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு தலைவனாக மாறுகிறார் பெருமாள் வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி. தங்களுக்கு எதிராக திரும்பிய மக்களை அடக்குவதற்கு வன்முறையை கையில் எடுக்கும் காவலர்கள், தங்களுடைய அதிகாரத்தை இரக்கமில்லாமல் அவர்கள் மீது காட்டுகிறார்கள். இதில் இறக்க குணம் கொண்ட கான்ஸ்டேபிளாக இருப்பவர்தான் சூரி. பாதிக்கப்படும் மக்களுக்கு எப்படி சூரிய உதவி செய்கிறார்? மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்கிறதா... இல்லையா? என பல்வேறு திருப்புமுனைகளோடு இப்படத்தை இயக்கி உள்ளார் வெற்றிமாறன்.
கலெக்ஷனின் மாஸ் காட்டும் சிம்புவின் 'பத்து தல'... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸை மிஞ்சிய இரண்டாவது நாள் வசூல்!
ஒரு காமெடி நடிகரை கமர்சியல் நடிகராக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் வெற்றிமாறன் இதனை மிகவும் சாமர்த்தியமாக செய்துள்ளார். நேற்றைய தினம் வெளியான இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும், பாராட்டுகளை குவித்து வரும் நிலையில்.. இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது.