நடிகை சோபிதா துலிபாலா, நாக சைதன்யா டிசம்பர் 4, 2024 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், சோபிதாவின் முன்னாள் காதலர் பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
நடிகை சோபிதாவுக்கு திரைப்படங்களை விட, அதிகம் கை கொடுத்தது ஓடிடி தளங்களில் இவர் நடிப்பில் வெளியான வெப் தொடர்கள் தான். எனவே இவரை ரசிகர்கள் "ஓடிடி ராணி" என்றே அழைக்கின்றனர். 2016-ல் அனுராக் காஷ்யப்பின், 'ராமன் ராகவ்' படத்தின் மூலம், அறிமுகமான சோபிதா, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் தான்.
26
Sobhita Dhulipala Cinema carrier
சோபிதா எப்படி தனித்துவமான திரைப்பட தேர்வுகள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவனிக்க வைத்தாரோ... அதே போல் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் கூர்ந்து கவனிக்க பட்டு வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், சோபிதா பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை தான், அடுத்த மாதம் (டிசம்பர் 4-ஆம் தேதி) திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
சமந்தா நாக சைதன்யாவை பிரிவதற்கு முக்கிய காரணம் சோபிதா தான்... என சிலர் கூறி வந்த நிலையில், சோபிதா - நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்வதற்கு முன்பு யாருடன் காதலில் இருந்தார்? என்கிற தகவல் தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
46
Pranav Misra
நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்வதற்கு முன்பு சோபிதாவுக்கு ஒரு உறுதியான உறவு இருந்துள்ளது. ஆம், சைதன்யாவை சந்திப்பதற்கு முன்பு சோபிதா பிரபல பேஷன் டிசைனர் பிரணவ் மிஸ்ராவுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் ஹியூமன் பிராண்டின் இணை நிறுவனர். தற்போது பிரணவ் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
அவர்கள் 2019-ல் ஒரு பேஷன் நிகழ்வில் சந்தித்த போது இருவருக்கும் இடையே நட்பு அரும்பிய நிலையில், பின்னர் அது காதலாக மலர்ந்தது. சில வருடங்கள் இருவரும் டேட்டிங் செய்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆனால் இதுவரை சோபிதா - பிரணவ் பிரிவுக்கான தெளிவான காரணம் வெளியாகவில்லை.
66
Naga Chaitanya-Sobhita Dhulipala Marriage
பின்னர் நாக சைதன்யா தனது முதல் மனைவி சமந்தா ரூத் பிரபுவிடமிருந்து பிரிந்த பிறகு, சோபிதாவுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்ல துவங்கினார். இவர்கள் இருவரும் எதேர்சையாக எடுத்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வெளியாகி... இருவருக்கும் இடையே உள்ள உறவை உறுதி செய்தது. ஆரம்பத்தில் தங்களுடைய உறவு குறித்து வெளிப்படுத்தாத இவர்கள், பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளதை உறுதி செய்தனர். அதன்படி சோபிதா - சைதன்யா திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் சைத்தாயா - சோபிதா கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.