தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா, சமீபகாலமாக படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்களுக்கே அதிக மவுசு உள்ளதால், எஸ்.ஜே,சூர்யாவுக்கு தொடர்ந்து வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன.
ஆர்.சி.15 திரைப்படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 2-வது திரைப்படம் இதுவாகும். இவர்கள் இருவரும் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே.சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் இப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ.7 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவே அவர் பெறும் அதிகபட்ச சம்பளமாகும். இவர் ஹீரோவாக நடித்த படங்களுக்கு கூட இந்த அளவு சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!