நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான சைமா விருது வழங்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது. படக்குழு சார்பில் ஆர்யா இவ்விருதை பெற்றுக்கொண்டார்.
சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது நடிகை பிரியங்கா மோகனுக்கு வழங்கப்பட்டது. நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
சிறந்த இயக்குனருக்கான விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த காமெடி நடிகர்களுக்கான விருது ரெடின் கிங்ஸ்லி மற்றும் தீபா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் நகைச்சுவை வேடங்களில் நடித்ததற்காக அவர்களுக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த பாடலாசிரியருக்கான விருது பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு வழங்கப்பட்டது. நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் இடம்பெற்ற இதுவும் கடந்து போகும் என்கிற பாடலை எழுதியதற்காக அவர் இவ்விருதை பெற்றார்.
சிறந்த கதாநாயகனுக்கான விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. நெல்சனின் டாக்டர் படத்தில் திறம்பட நடித்ததற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த நடிகைக்கான சைமா விருது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது. திட்டம் இரண்டு படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் அரவிந்த் சாமிக்கு வழங்கப்பட்டது. ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்ததற்காக அவர் இவ்விருதை பெற்றார்.
சிறந்த துணை நடிகைக்கான சைமா விருதை நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலி பெற்றார். கர்ணன் படத்தில் நடிகர் தனுஷுக்கு தங்கையாக நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் விருது தயாரிப்பாளர் மனோஜ் குமாருக்கு வழங்கப்பட்டது. வஸந்த் ரவி நடிப்பில் வெளியான ராக்கி படத்தை தயாரித்ததற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது. மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை சுபாஷ் செல்வம் பெற்றார். திட்டம் இரண்டு படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருந்து வழங்கப்பட்டது.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ஷிரேயாஸ் கிருஷ்ணா பெற்றார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு Outstanding Performance of the Year விருது வழங்கப்பட்டது. கர்ணன், மண்டேலா, டாக்டர் என ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததால் அவருக்கு இவ்விருது கிடைத்தது.