Sivakarthikeyan new movie : சிவகார்த்திகேயனின் அடுத்த டார்கெட் சமந்தா.... மீண்டும் இணையும் சீமராஜா கூட்டணி..!

First Published | Mar 30, 2022, 7:10 AM IST

Sivakarthikeyan new movie : டான் மற்றும் அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில் டான் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.20’

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது ‘எஸ்.கே.20’ திரைப்படம் தயாராகி வருகிறது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி வில்லனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டான் மற்றும் அயலான் ரிலீசுக்கு வெயிட்டிங்

இதுதவிர டான் மற்றும் அயலான் போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில் டான் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற மே மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அயலான் படத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாகும் என கூறப்படுகிறது.
 

Tap to resize

மண்டேலா இயக்குனருடன் கூட்டணி

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க உள்ளாராம். இவர் யோகிபாபு நடிப்பில் கடந்தாண்டு ரிலீசாகி வரவேற்பை பெற்ற மண்டேலா படத்தை இயக்கிவர் ஆவார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோயினாக சமந்தா

மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பொன்ராம் இயக்கிய சீமராஜா படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளனர். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... BiggBoss Ultimate : பணத்தை வைத்து ஆசை காட்டும் பிக்பாஸ்... பெட்டியை தூக்கியது இவரா? - வெளியான ஷாக்கிங் வீடியோ

Latest Videos

click me!