JBaby Movie : ‘ஜெ.பேபி’யா தலைப்பே வில்லங்கமா இருக்கே.... அடுத்த சம்பவத்திற்கு தயாராகிறாரா பா.இரஞ்சித்?

First Published | Mar 30, 2022, 5:44 AM IST

JBaby Movie : பா.இரஞ்சித் தயாரிக்கு 5-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஜே.பேபி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்குகிறார்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனர்

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனரான அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர், அடுத்ததாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். 

ரஜினியை வைத்து 2 ஹிட்

இதையடுத்து ரஜினியை வைத்து காலா, கபாலி என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். பின்னர் இவர் இயக்கத்தில் சார்பேட்டா பரம்பரை திரைப்படம் வெளியானது. பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். கடந்தாண்டு ஓடிடியில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது.

Tap to resize

தயாரிப்பிலும் பிசி

இவ்வாறு பிசியான இயக்குனராக வலம் வரும் பா.இரஞ்சித், படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் இதுவரை வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி உள்ளன.

அடுத்தது ஜே.பேபி

இந்நிலையில், அவர் தயாரிக்கு 5-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஜே.பேபி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்குகிறார். இப்படத்தில் தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும், இதற்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடித்திருந்தார்.

வில்லங்கமான தலைப்பு

மேலும் ஊர்வசி, மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் நகைச்சுவை கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. டோனி பிரிட்டோ இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் தலைப்பை பார்த்த ரசிகர்கள் இது எதோ வில்லங்கமா இருக்கே என கருத்து தெரிவித்து வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறிக்கும் வகையில் உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... Anushka Shetty : மீண்டும் இணையும் பாகுபலி ஜோடி... பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா?

Latest Videos

click me!